வாஷிங் மிஷினை சரி செய்யும்போது எதிர்பாரதவிதமாக தலையை விட்டு சிக்கி தவித்த சீன மனிதர்.
தென்கிழக்கு சீனாவின் ஃபுஜியன் மாகாணத்தில் சலவை இயந்திரத்தில் ஒருவரின் தலை சிக்கிக் கொண்டது. வழக்கத்திற்கு மாறான அவசரகால உதவியை சந்த்தித்த தீயணைப்பு படையினர் அவரை பத்திரமாக மீட்டு எடுத்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறியதாவது:-
சலவை இயந்திரத்தில் உள்ள உருளையை சரி செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரது தலை அதில் சிக்கிக் கொண்டது.
ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி அவரை அதிலிருந்து பத்திரமாக மீட்டெடுத்தோம். இதுபோன்ற மக்கள் சீனாவில் அதிகம் உள்ளனர். விசித்திரமாக ஏதாவது ஒரு ஆபத்தில் சிக்கி கொள்வதும், அவர்களை தீயணைப்பு படையினர் காப்பாற்றுவதும் சாதாரணமாகிவிட்டது, என்றனர்.