இங்கிலாந்து நாட்டின் முன்னணி நிறுவனம் ஒன்று விந்தணுவை ஏற்றுமதி செய்யும் அனுமதியை பெற்றுள்ளதை அடுத்து ஒருவர் கொடுக்கும் விந்தணு உலகம் முழுவதும் 75 குடும்பங்களுக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே உலகம் முழுவதும் சகோதர சகோதரிகளாக இருப்பார்கள் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இங்கிலாந்து நாட்டின் விதிகளின்படி உள்நாட்டில் ஒருவரின் விந்தணு பத்து குடும்பத்திற்கு மேல் கொடுக்கக் கூடாது என்று இருக்கும் நிலையில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் ஒருவருடைய விந்தணு 75 குடும்பங்கள் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உலக அளவில் உடன்பிறப்புகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாட்டின் முன்னணி நிறுவனமான கிரையோஸ் விந்தணுக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வருவதாகவும் உலகின் மிகப்பெரிய விந்தணு மற்றும் கருமுட்டை விற்பனை செய்யும் இந்த நிறுவனம் தற்போது புதிதாக ஒரு கிளையை தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு விந்தணு நன்கொடையாளர் குறைந்தபட்சமாக 25 குடும்பங்களுக்கும் அதிகபட்சமாக 75 குடும்பங்களுக்கும் விந்தணு கொடுப்பதாகவும் இதனால் உலக அளவில் ஒரே தந்தைக்கு பிறக்கும் குழந்தைகள் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.