Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சலுகை தரலைன்னா எலான் மஸ்க் ஆப்பிரிக்காவுக்கு ஓடியிருப்பார்! - மீண்டும் ட்ரம்ப் சீண்டல்!

Prasanth K
செவ்வாய், 1 ஜூலை 2025 (12:18 IST)

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே சமீபமாக வார்த்தை மோதல் வலுத்து வரும் நிலையில், மீண்டும் எலான் மஸ்க்கை சீண்டியுள்ளார் டொனால்டு ட்ரம்ப்.

 

முன்னதாக ட்ரம்ப் கொண்டு வரி விதிப்பு முறைகள் குறித்து மஸ்க் விமர்சித்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொண்டனர். அதன்பின்னர் தனது பேச்சுக்கு எலான் மஸ்க் மன்னிப்பு கேட்ட நிலையில், ட்ரம்ப்பும் நல்ல விதமாகவே பேசி வந்தார்.

 

இந்நிலையில் சமீபத்தில் டொனால்டு ட்ரம்ப் எலெக்ட்ரானிக் வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்யும் மசோதாவை கொண்டு வந்தார். அமெரிக்காவில் மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகப்படுத்தி கார்பன் எரிப்பை குறைக்க கொண்டு வரப்பட்ட இந்த வரிச்சலுகையை ரத்து செய்ய ட்ரம்ப் முயற்சிப்பதை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார். ஏனென்றால் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்த வரிச்சலுகையை பயன்படுத்தி அமெரிக்கா முழுவதும் ஏராளமான கார்களை விற்பனை செய்துள்ளது.

 

எலான் மஸ்க்கின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து பேசியுள்ள டொனால்டு ட்ரம்ப் “அமெரிக்க வரலாற்றில் எந்த மனிதரையும் விட அதிகமான சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான். சலுகைகள் மட்டும் இல்லையென்றால் அவர் கடையை காலி செய்து விட்டு தென்னாப்பிரிக்காவிற்கே திரும்பி செல்ல வேண்டியிருக்கும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. அடித்து சொன்ன விஜய்..!

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

திமுக, அதிமுக கொள்கையில் திசைமாறிவிட்டன! விஜய்யால் மட்டும்தான் இனி விடிவுக்காலம்?! - ஆதவ் அர்ஜூனா!

ராஜா நீங்கதான்.. உங்க தளபதி யாரு? - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments