Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரம்ப் வெற்றி: எலான் மஸ்க் சொத்து மதிப்பு ஒரே நாளில் 26.5 பில்லியன் டாலர்கள் உயர்வு..

Advertiesment
Elon musk Trump

Siva

, வெள்ளி, 8 நவம்பர் 2024 (07:28 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு ஒரே நாளில் 26.5 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ள தொழில் அதிபர் எலான் மஸ்க், சமீபத்தில் நடந்த அமெரிக்க தேர்தலில் டிரம்ப் ஆதரவாளராக இருந்தார். டிரம்ப் கட்சியின் பிரசாரத்திற்காக அவர் சுமார் 119 பில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்திருந்தார்.

இந்நிலையில் டிரம்ப் வெற்றி என அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 26.5 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, 290 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, மஸ்க்கின் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

டெஸ்லா நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 14.75% (37.09 டாலர்கள்) உயர்ந்து, 288.53 டாலர்களாக உயர்ந்துள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி 242.84 டாலராக இருந்த பங்கு விலை, நவம்பர் 6 ஆம் தேதி 288.53 டாலராக உயர்ந்துள்ளது. டிரம்பின் வெற்றியால், எலான் மஸ்க் மட்டுமின்றி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் மொத்த சொத்து மதிப்பு 7.14 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, 228 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை