பாகிஸ்தான் நாட்டில் மின்சார தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அங்கு இரவு 8 மணிக்கு கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ்ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியிலேயே கடும் பணவீக்கம் பொருளாதார நெருக்கடி நிலவி வந்த நிலையில், தற்போது அங்கு மின்சார உற்பத்தி பாதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூனில் அங்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்பினாலும் ரஷிய- உக்ரைன் போர் எதிரொலியா, அங்கு எரிசக்தித்துறை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இது தற்போது மின்சார தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது.
இதனால், இரவில் 8 மணிக்கு அனைத்துக் கடைகளும் அடைக்க வேண்டும் எனவும், அரசு ஊழியர்கள் 20% வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் எனவும், ஆனால், திருமண மண்டபங்கள் மட்டும் இரவு 10 மணி இயங்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ரூ.62 பில்லியன் வரை சேமிக்கலாம் என்று அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார்.