பாகிஸ்தானில் நடக்கும் பி எஸ் எல் கிரிக்கெட் தொடர்தான் கடினமானது என பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் டி20 சீசன் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த போட்டிகளில் 10 அணிகள் போட்டியிட்டு விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளை ஒளிபரப்புவதற்கான தொலைகாட்சி உரிமம் மற்றும் ஓடிடி உரிமங்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விடப்படுகின்றன.
இதே போல மற்ற நாடுகளும் தங்கள் நாட்டில் லீக் போட்டிகளை நடத்தி வருகின்றன. ஆனால் அவை ஐபிஎல் அளவுக்கு பணம் குவிக்கும் தொடராக அமையவில்லை. இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் பேசிய கருத்து ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதில் “ பாகிஸ்தான் சூப்பர் லீக் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் விளையாடியுள்ள வீரர்களைக் கேட்டால் ஐபிஎல் தொடரை விட பி எஸ் எல் தொடர்தான் கடினமானது என சொல்வார்கள்” எனப் பேசியுள்ளார்.