உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க ஏற்பதாக அறிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் டுவிட்டரில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதாகவும் அந்த கணக்குகள் குறித்த தகவல்கள் முழுமையாக கொடுத்தால் மட்டுமே டுவிட்டரை வாங்குவது குறித்த முடிவை எடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திடீரென நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்
இதன் காரணமாக டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் 11 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது