எகிப்தில் செல்போனை விழுங்கிய இளைஞர் 6 மாதமாக அதை சொல்லாமல் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல சமயங்களில் சிறுவர்கள் பொருட்கள் எதையாவது விழுங்கி விடுவதும் அதை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுப்பதுமான சம்பவங்கள் அவ்வபோது வெளியாவது உண்டு. அரிதாக பெரியவர்கள் பலரும் கூட இதுபோன்ற செயல்களை செய்வது உண்டு.
அந்த வகையில் எகிப்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கையடக்க செல்போன் ஒன்றை விழுங்கியுள்ளார். அது வயிற்றில் சிக்கிக் கொண்ட நிலையில் அதை வெளியில் சொல்லாமல் கடந்த 6 மாதமாக மறைத்து வந்துள்ளார். வயிற்றுவலியால் கஷ்டப்பட்ட அவரது வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் வயிற்றில் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அறுவை சிகிச்சை செய்து செல்போனை எடுத்துள்ளனர்.