பசுபிக் பெருங்கடல் வளையப் பகுதியில் இருக்கும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் ஸ்கேலில் 6.2 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மருத்துவமனை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து அதில் இருந்த நோயாளிகள் பலர் சிக்கியுள்ளனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை மூன்று பேரின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த நிலநடுக்கத்தால் 7 பேர் வரை பலியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.