Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டு வா இந்தியா! – துபாய் முழுவதும் பறந்த இந்திய கொடி!

Advertiesment
Dubai
, திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:16 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் இந்த பாதிப்பிலிருந்து இந்தியா மீள வேண்டும் என நேற்று துபாய் முழுவதும் பல இடங்களில் இந்திய கொடி காட்சிப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிற்கு உதவ பல நாடுகள் நேச கரம் நீட்டியுள்ள நிலையில் நேற்று இரவு துபாயில் பிரபல உயரமான ஹோட்டலான புர்ஜ் கலீபா உட்பட பெரிய கட்டிடங்களில் இந்திய கொடி காட்சிப்படுத்தப்பட்டதுடன் StayStrongIndia என்ற வாசகங்களும் இடம்பெற்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி தயாரித்த மாஸ்க்கை இலவசமாக வழங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்!