Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது; ஜன் கீ பாத்-ஐ கையில் எடுப்போம்! – ராகுல்காந்தி ட்வீட்!

Advertiesment
சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது; ஜன் கீ பாத்-ஐ கையில் எடுப்போம்! – ராகுல்காந்தி ட்வீட்!
, ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (14:44 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் சிஸ்டம் தோல்வியடைந்து விட்டதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்றவற்றால் மக்கள் பெரும் இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி “சிஸ்டம் தோல்வி அடைந்து விட்டது. எனவே ஜன் கீ பாத் முக்கியம். இந்த நெருக்கடியான நேரத்தில் பொறுப்பான குடிமக்கள் தேவை. காங்கிரஸ் நிர்வாகிகள் அனைத்து அரசியல் பணிகளையும் நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மருத்துவமனைகளில் 85% படுக்கைகளில் கொரோனா நோயாளிகள் என தகவல்!