Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பால்கனியில் துணி காயப்போட்டால் அபராதம்! – துபாய் அரசு கறார்!

Advertiesment
World
, செவ்வாய், 28 டிசம்பர் 2021 (11:32 IST)
துபாயில் பால்கனியில் துணிகளை காயப்போடுவது உள்ளிட்டவற்றை செய்தால் அபராதம் என துபாய் அரசு அறிவித்துள்ளது.

துபாயில் அடுக்குமாடி கட்டிடங்கள் பல உள்ள நிலையில் அந்த கட்டிடங்களில் வசிப்போர் துணி காயப்போடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு மாடியின் பால்கனியை உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில் அடுக்குமாடிகளில் குடியிருப்போர் தங்களது பால்கனியின் அழகை பராமரிக்க வேண்டும் என துபாய் அரசு கூறியுள்ளது. மேலும் பால்கனியின் துணி காய வைத்தல், சிகரெட் துகள்களை பால்கனியிலிருந்து கொட்டுதல், குப்பைகளை கொட்டுதல், பறவைகளுக்கு பால்கனியில் உணவளித்தல், தொலைக்காட்சி ஆண்டனாக்களை பால்கனியில் பொருத்துதல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இவற்றை செய்தால் 500 முதல் 1,500 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எகிறும் ஒமிக்ரான் பாதிப்பு; 11,500 விமானங்கள் ரத்து! – பயணிகள் தவிப்பு!