உலகம் முழுவதும் கொரோனாவின் பல்வேறு வேரியண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இது முடிவல்ல என ஐ.நா தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது வேகமாக பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஐ.நா பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் ”கொரோனா பெருந்தொற்று இந்த உலகம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இதைவிட மோசமான பெருந்தொற்றுகளும் எதிர்காலத்தில் வரலாம். அதை எதிர்கொள்ள இப்போதிருந்தே நாம் தயாராக இருக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்போதே எதிர்காலத்தையும் திட்டமிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.