Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க சுகாதார மைய இயக்குனர் ஆகிறார் இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க சுகாதார மைய இயக்குனர் ஆகிறார் இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்:  டிரம்ப் அறிவிப்பு

Siva

, புதன், 27 நவம்பர் 2024 (13:32 IST)
அமெரிக்க அரசுக்கு ஆலோசனை சொல்லும் செயல் திறன் என்ற துறையின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அடுத்த கட்டமாக அமெரிக்க சுகாதார மைய இயக்குனராக இந்திய வம்சாவளி டாக்டர் ஜே. பட்டாச்சாரியா என்பவர் நியமனம் செய்யப்படுவதாக ட்ரம்ப் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து டாக்டர் பட்டாச்சாரியா கூறியபோது, "அதிபர் ட்ரம்ப் என்னை தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குனர் பதவிக்கு  நியமனம் செய்து அறிவித்ததை நான் கேட்டு பெருமை அடைந்தேன்.   அமெரிக்காவுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக மாறியதில் எனக்கு மகிழ்ச்சி. அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமான சிறந்த அறிவியல் நாடாக மாற்றுவோம்" என்று கூறியுள்ளார்.

1968 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த ஜெ. பட்டாச்சாரியா 1997 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றார். அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு பொருளாதாரத் துறையில் இருந்து டாக்டர் பட்டம் பெற்ற நிலையில், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக சுகாதாரக் கொள்கை பேராசிரியராக பணியாற்றினார்.

அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை இவர் கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது அமெரிக்க அரசின் சுகாதார நிறுவனங்களின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் திருப்பம்.. முதல்வர் பதவி ஏற்பதில் சிக்கலா?