Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடிக்கும் தொலைவில்தான் அமெரிக்கா இருக்கிறது – ஈரான் எச்சரிக்கை

அடிக்கும் தொலைவில்தான் அமெரிக்கா இருக்கிறது – ஈரான் எச்சரிக்கை
, திங்கள், 3 ஜூன் 2019 (11:22 IST)
ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமான பிரச்சினை நாளாக நாளாக அதிகரித்து கொண்டே செல்கிறது. உலக நாடுகள் தலையிட்டு பிரச்சினையை சரிசெய்ய முயற்சி செய்தாலும் ஒருவரை ஒருவர் அடிக்கடி எச்சரித்து அறிக்கைகளை பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஈரான் ரகசிய அணு ஆயுத திட்டத்தில் ஈடுபடுவதாக கூறி அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. அதற்கு பிறகி ஈரான் மீது பல வித தடைகளை ஏற்படுத்தி நெருக்கடியை கொடுத்து வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி “ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க ராணுவம் இருக்கிறது” என அமெரிக்காவை எச்சரித்துள்ளார். ஒருவேளை இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்தால் ஒரு பீப்பாய் எண்ணெயை 100 டாலர்களுக்கும் மேல் உயர்த்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான இந்த மோதல் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மற்ற நாடுகள் கவலைக் கொண்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விழுந்தது அடுத்த விக்கெட்: காலியாகும் தினகரன் கூடாரம்!