Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரம்புக்கு 20ல் ஒருவருக்கு பாதிக்கும் அரிய நோய்.. இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பவில்லை என தகவல்?

Advertiesment
டொனால்ட் ட்ரம்ப்

Siva

, வெள்ளி, 18 ஜூலை 2025 (09:29 IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு இருபது பேரில் ஒருவருக்கு வரும் ஒரு அரிய நோய் வந்துள்ளதாகவும், அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தம் சரியாக திரும்பவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அமெரிக்க அதிபராக பதவி வகித்த ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிரி நாடு, நட்பு நாடு என பாகுபாடு இல்லாமல் அனைத்து நாடுகளுக்கும் வரிகளை சரமாரியாக விதித்தவர். இந்த நிலையில், அதிபர் ட்ரம்புக்கு காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு பரிசோதனை செய்ததில் கிரானிக் வீனஸ் இன்சஃபிசியன்சி (Chronic Venous Insufficiency) என்ற நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நோய் உலக அளவில் 20 பேரில் ஒருவரைப் பாதிக்கும் எனவும், கால்களில் இருந்து இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பாததால் இது ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரத்தம் தேங்கி, நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் நிலை இது என்றும் கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து, ட்ரம்ப் தகுந்த மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் அவர் பூரண குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை.. தம்பதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!