Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும்: நடிகை ரோஜா!

Advertiesment
ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும்: நடிகை ரோஜா!

Siva

, புதன், 6 நவம்பர் 2024 (15:24 IST)
ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என நடிகை ரோஜா வலியுறுத்தியுள்ளார்.

 திருப்பதி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது, அவர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் இரண்டு பேர் புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், புதருக்குள் மயங்கி கிடந்த மாணவியை பார்த்த பெற்றோர் உடனடியாக அரசு உயர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்; அங்கு தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா இதுகுறித்து பேசும்போது, கடந்த 120 நாட்களில் பாலியல் பலாத்காரம், கொலை, வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான 110 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஆந்திராவில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் டம்மியாக உள்ளார் என்றும், அனைத்து அரசு துறைகளும் தோல்வியடைந்ததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு ஊழியர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு!