பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை: கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் கதறல்!
பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை: கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் கதறல்!
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் அகாடமியில் தற்கொலை படை தீவிரவாதிகள் சமீபத்தில் கடுமையான தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 62 காவலர்கள் மற்றும் 2 ராணுவ வீரர்கள் பலியாகினர் மேலும் 170 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர், ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் சோயிப் அக்தர் இந்த சம்பவத்தால் வெளிநாட்டு அணிகளுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை. பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலை கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
வெளிநாட்டு அணிகளுக்கு தற்போது பாதுகாப்பு இல்ல்லாத நிலையில் இயல்பு நிலை முற்றிலும் திரும்பும் வரை வெளிநாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அழைக்க வேண்டாம். ஆனால், சில காலம் கழித்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறினார்.
இதற்கு முன்னர் கடந்த 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை அணி வீரர்களை குறிவைத்து அவர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதன் பின்னர் பாகிஸ்தான் சென்று விளையாட முன்னணி நாடுகள் மறுத்தன. அதன் பின்னர் அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை.