Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பல்லோவில் பரபரப்பு: பூலோகத்தை காக்க வந்த அவதாரமும் மருத்துவமனையில் அனுமதி!

அப்பல்லோவில் பரபரப்பு: பூலோகத்தை காக்க வந்த அவதாரமும் மருத்துவமனையில் அனுமதி!

Advertiesment
அப்பல்லோ
, வெள்ளி, 28 அக்டோபர் 2016 (08:37 IST)
கடந்த ஒரு மாத காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், போலீஸ் பாதுகாப்பும், தொண்டர்கள், கட்சியினர், தலைவர்கள் என ஒரே பரபரப்புடனேயே நகர்கிறது ஒவ்வொரு நிமிடமும் அப்பல்லோவில்.


 

 
 
இந்நிலையில் இன்னொரு பரபரப்பு மனிதரும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்பல்லோ களைகட்டுகிறது. கடவுள் விஷ்னுவின் பத்தாவது அவதாரம் நான் தான், பூலோகத்தை காக்க வந்த அவதாரம் நான் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய விஜயகுமாரும் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுளார்.
 
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் கல்கி பகவான் ஆசிரமம் என்ற பெயரில் பல்வேறு ஆசிரமங்களை நடத்தி வருகிறார். இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட தற்போது முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அப்பல்லோவில் கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகுமாரை பார்க்க அவரது பக்தர்கள் அப்பல்லோவில் குவிந்து வருவதால் அங்கு பெரும் பரபர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா அங்குள்ள சூழலில் மருத்துவமனை நிர்வாகம் இந்த கூட்டத்தை எப்படி சமாளிக்க போகிறதோ.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டம்: நவம்பர் 1 முதல் அமல்!