அமெரிக்காவில் எச்1-பி விசா பெற கட்டணம் நிர்ணயித்து ட்ரம்ப் உத்தரவிட்ட நிலையில் இது புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும்தான் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையுடன் களமிறங்கியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் வெளிநாட்டினரின் வேலை வாய்ப்புகளை குறைத்திடும் வகையில் எச்1-பி விசா பெறுவதற்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக (88 லட்சம் ரூபாய்) உயர்த்தியுள்ளார். இதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தது. இதனால் வெளிநாட்டினரை பணியமர்த்தியுள்ள பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தன. மேலும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள எச்1பி விசாதாரர்கள் உடனடியாக நாடு திரும்பும்படி அந்தந்த நிறுவனங்கள் செய்தி அனுப்பியிருந்தன.
இதனால் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியே ஆட்டம் கண்ட நிலையில், இந்த புதிய எச்1-பி விசா நடைமுறை புதிதாக விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்குதான் பொருந்தும் என்றும், ஏற்கனவே எச்1பி விசா பெற்றுள்ளவர்களுக்கு பொருந்தாது என்றும், மேலும் அவர்கள் புதுப்பிக்கும்போது பழைய முறையின் அடிப்படையிலேயே புதுப்பிக்கலாம் என்றும் வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் ஐடி நிறுவனங்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன.
Edit by Prasanth.K