தென் ஆப்பிரிக்காவில் தன்னுடைய உரிமையாளரின் மோதிரத்தை விழுங்கியதற்காக நாய் ஒன்று டிவிட்டரில் மன்னிப்புக் கேட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியாவைச் சேர்ந்த ஒருவரின் செல்ல வளர்ப்புந் நாய் பெப்பர். குறும்புகளுக்குப் பெயர் போன இந்த நாய் சில தினங்களுக்கு முன்னர் குறும்பாக உரிமையாளரின் நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கியுள்ளது. இதை அடுத்து அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமையாளர் தன் நிச்சயதார்த்த மோதிரத்தைத் தேடிக் கொண்டு இருக்க பெப்பரின் உடல்நிலை அவரை மேலும் கவலைக்குள்ளாக்கி உள்ளது.
எனவே பெப்பரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்ல மருத்துவர்கள் அதன் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது ஸ்கேனில் பெப்பரின் வயிற்றில் மோதிரம் இருந்துள்ளது. இதன் பின்னர் மருந்துகளின் மூலம் பெப்பரை வாந்தி எடுக்க வைத்த மருத்துவர்கள், பெப்பரைக் காப்பாற்றினர். இந்த சம்பவம் பெப்பரின் பேரில் அதன் உரிமையாளர் ‘குறும்புத்தனமாக எனது அம்மாவின் மோதிரத்தை விழுங்கிவிட்டேன். இதுகுறித்து வேறு எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம்! அந்த நேரத்தில் அது எனக்கு ஒரு நல்ல யோசனையாகத் தோன்றியது!’ என மன்னிப்புக் கேட்கும் விதமாகக் கூறியுள்ளது.