Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சம்பள உயர்வு வேண்டாம்: இப்படியும் போராடும் கனடா டாக்டர்கள்

Advertiesment
மருத்துவர்கள் | டாக்டர்கள் | சம்பள உயர்வு | கனடா | ஊதிய உயர்வு | Quebec | canada doctors salary | Canada Doctors Protest | canada doctors | canada
, ஞாயிறு, 11 மார்ச் 2018 (13:23 IST)
ஏற்கனவே தங்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் இதற்கு மேல் தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று அரசுக்கு கனடா டாக்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியா உள்பட பல நாட்களில் சம்பள உயர்வு கேட்டுத்தான் ஊழியர்கள் போராடுவதை பார்த்திருக்கின்றோம். ஆனால் உலகில் முதல்முறையாக தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று கனடா டாக்டர்கள் கோரிக்கை விடுத்திருப்பதை உலகமே அதிசயமாக பார்த்து வருகிறது

சமீபத்தில்  கனடா நாட்டில் உள்ள கியூபெக் நகர அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள  மருத்துவர்கள் உடனடியாக சம்பள உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களைவிட சம்பளம் குறைவாகவும், அதிக உழைப்பும் தந்து கொண்டிருக்கும் நர்ஸ்கள் உள்பட மற்ற மருத்துவமனை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தாருங்கள் என்றும், எங்களுக்கு இப்போது வழங்கப்படும் சம்பளமே போதுமானது என்றும் கியூபெக் நகர மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி பிரச்சனைக்காக அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய போவதில்லை - எடப்பாடி பழனிச்சாமி