அபாயகரமான செஜ்ஜில் ஏவுகணை தயார் நிலையில்? - இஸ்ரேல் மக்களுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!

Prasanth K
வியாழன், 19 ஜூன் 2025 (13:50 IST)

ஈரான் - இஸ்ரேல் போரில் ஈரான் ராணுவம் சக்திவாய்ந்த செஜ்ஜில் (Sejjil Missile)ஐ இஸ்ரேல் மீது ஏவ உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தொடங்கி நடந்து வரும் நிலையில் புகழ்பெற்ற இஸ்ரேலின் Dome வான் பாதுகாப்பு அமைப்பை ஈரானின் ஏவுகணைகள் தவிடு பொடியாக்கி வருகின்றன. இன்னும் ஈரானின் தாக்குதல் சில நாட்கள் தொடர்ந்தால் இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்பை முற்றிலும் இழக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இஸ்ரேலின் நகரங்களுக்கும் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் வெடித்து வருகின்றன.

 

இந்நிலையில் போரின் அடுத்த கட்டமாக இஸ்ரேல் மீது சக்திவாய்ந்த செஜ்ஜில் ஏவுகணைகளை ஏவி தாக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரானின் சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றான செஜ்ஜில் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடியது, சுமார் 2500 கி.மீ பயணித்து இலக்கை தாக்கும் செஜ்ஜிலை கொண்டு ஈரானால் எந்த ஒரு ஐரோப்பிய நாட்டையுமே குறிவைக்க முடியும்.

 

அப்படியான செஜ்ஜில் ஏவுகணையை இஸ்ரேல் மீது ஈரான் ஏவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஈரான் ராணுவமும் இஸ்ரேல் மக்களுக்கு ‘பதுங்குங்கள் அல்லது சாவீர்கள்’ என்ற வகையிலான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments