Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏமன் நாட்டின் கடற்கரையில் கரையை கடந்தது தேஜ் புயல்.. வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (07:42 IST)
அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் கரையை கடந்ததாகவும்,  ஏமன் நாட்டின் கடற்கரையில் அதிகாலை 2.30 முதல் 3.30 க்குள் கரையை கடந்தது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏமன் அரசாங்கம் கரையோரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் புயல் காரணமாக ஏற்பட்ட சேத மதிப்புகளை ஏமன் அரசு கணக்கிட்டு வருவதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேஜ் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு ஏமன் அரசு அவசர வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய - சீன உறவில் ஒரு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு

காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது அதிகார துஷ்பிரயோகம்: அண்ணாமலை கண்டனம்..

25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்: தவெக தலைவர் விஜய் உத்தரவு

விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்: டிடிவி தினகரன் கணிப்பு..!

சென்னையில் நாளை முதல் டீ,காபி விலை உயர்வு. டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments