அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் கரையை கடந்ததாகவும், ஏமன் நாட்டின் கடற்கரையில் அதிகாலை 2.30 முதல் 3.30 க்குள் கரையை கடந்தது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏமன் அரசாங்கம் கரையோரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றியதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் புயல் காரணமாக ஏற்பட்ட சேத மதிப்புகளை ஏமன் அரசு கணக்கிட்டு வருவதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேஜ் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு ஏமன் அரசு அவசர வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.