காருக்கு வழிவிடாமல் சாலையில் படுத்திருந்த முதலைகள். - வைரலாகும் வீடியோ

வியாழன், 19 செப்டம்பர் 2019 (20:54 IST)
ஆஸ்திரேலியாவில் , ஒரு சாலையில் கார் செல்வதற்கு வழிவிடாமல் வழி மறித்து முதலைகள் படுத்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றது.
ஆஸ்திரேலிய நாட்டின் உள்ள சுற்றுலா பயணிகள் அர்ன்ஹெம் லாந்து என்ற சாலை வழியாக, பிரசித்தி பெற்ற காக்கடு என்ற தேசிய பூங்காவுக்குச் சென்றுள்ளனர்.
 
அப்போது, காஹில்ஸ் கிராசிங் என்ற இடத்தை அவர்கள் நெருங்கிய போது, அங்கு சில முதலைகள் சாலைகள் படுத்துக்  கொண்டிருந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஹாரன் ஒலி எழுப்பினர். அந்த சத்தத்தில் முதலைகள் அங்கிருந்து ஒவ்வொன்றாக சென்றன. இந்தக் காட்சியை ஒருவர்  வீடியோ  எடுத்து வெளியிட தற்பொழுது இது வைரலாகிவருகிறது.
 
மேலும், முதலைகள் இந்த இடத்தில் எப்போதும் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வராமல் மாற்று வழியை பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் திருப்பதி தேவஸ்தானத்தில் சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி!