Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைன் போர் பற்றிய விமர்சித்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

உக்ரைன் போர் பற்றிய விமர்சித்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
, திங்கள், 17 ஏப்ரல் 2023 (22:15 IST)
உக்ரைன் போருக்கு எதிரான விமர்சித்த காரா முர்சாவுக்கு,  நீதிமன்ற விசாரணை முடிவில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

உக்ரைன் நாட்டின் மீது அண்டை நாடான ரஷியா கடந்தாண்டு போர் தொடுத்தது. இந்தப் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்களும் அப்பாவி மக்களும் பலியாகியுள்ள நிலையில், ஓராண்டைக் கடந்து இப்பொர்ர்  இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் படை மற்றும் பணபலமிக்க ரஷியாவுக்கு எதிராக, உக்ரைன் நாட்டிற்கு,  அமெரிக்கா, மற்றும் நேட்டோ கூட்டமைப்பு நிதியுதவி மற்றும் ஆயுதத் தளவாட உதவிகள் அளித்து வருகிறது.

இந்த நிலையில், ரஷியா போர் தொடுத்துள்ளதற்கு எதிராக விமர்சிப்பவர்களுக்கு அரசு தண்டனை அளித்து வருகிறது.

அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு, காரா முர்சா  அரிசோனா பிரதி நிதிகள் சபையில் பேசியபோது, உக்ரைன் போருக்கு எதிராகப் பேசினார்.கடந்த ஆண்டே தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பத்திரிக்கையாளரும், எதிக்கட்சிக்காரருமான காரா முர்சாவுக்கு,  நீதிமன்ற விசாரணை முடிவில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது,
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிக மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் காத்மண்டு முதலிடம்!