Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.500 கோடி நஷ்டம்: திரைத்துறையினர் அதிர்ச்சி

Advertiesment
ரூ.500 கோடி நஷ்டம்: திரைத்துறையினர் அதிர்ச்சி
, செவ்வாய், 3 மார்ச் 2020 (07:49 IST)
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் 500 கோடி ரூபாய் அளவிற்கு திரைத் துறைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கொரோனா வைரஸ்கள் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து தொழில்களும் மந்தமான நிலை காணப்படுகிறது. பொருளாதார வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி,  பங்குச் சந்தை வீழ்ச்சி உள்பட பலர் வீழ்ச்சிகளை உலக மக்கள் சந்தித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு திரைத்துறையும் தப்பவில்லை. சீனா தென்கொரியா இத்தாலி போன்ற நாடுகளில் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டு விட்டதாகவும் படப்பிடிப்புகளும் இப்போதைக்கு நடக்காது என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் அளவிற்கு கொரோனா வைரஸ் தாக்குதலால் திரைத் துறைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்தியாவில் இதுவரை திரைத்துறைக்கு கொரோனா வைரசால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஸ்புக், டுவிட்டரில் இருந்து விலகல்? மோடியின் முடிவுக்கு ராகுல் அறிவுரை