Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவில் எலிகளுக்கு கொரொனா தொற்று! ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

Advertiesment
rats
, திங்கள், 13 மார்ச் 2023 (23:01 IST)
சீனாவில் இருந்து கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பரவி பலகோடி உயிர்களைக் காவு வாங்கியது. இதில், குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரும்  தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்செடுக்க முடியாமலும், நோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் தவித்தனர்.

எனவே கடந்த 2020 –ல் வந்த பெருந்தொற்றுப்போல் இன்னொருமுடை வரக்கூடாது என்பதில் உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையுடன் உள்ளனர்.

இந்தக் கொரொனா தொற்றில், ஒமிக்ரான், பிஎஃப்2 போன்ற உருமாறிகளும் அடுத்தடுத்த அலைகளாக வந்து மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது, மனிதர்களை தாக்கியதை அடுத்து, விலங்குகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகரில் உள்ள எலிகளுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 79 எலிகளுக்குச் சோதனை செய்யப்பட்டதில், அவற்றில், 16 எலிகளுக்கு ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் உருமாறிய தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் மற்ற விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
கொரொனா தொற்று எலிகளுக்கு உறுதியாகியுள்ள சம்பவம் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது கைது வாரண்ட்