Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் மூத்த தலைவர் உட்பட 22 பேர் சுட்டுக் கொலைபலி

Advertiesment
Iraq
, திங்கள், 13 மார்ச் 2023 (20:21 IST)
தென்மேற்கு ஆசியாவிலுள்ள மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் அப்துல் லதிஃப் ரஷித் தலைமையிலான ஆட்சி நடந்து  வருகிறது. இதன் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள மேற்கு மாகாணமாக அன்பரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக காவல்துறை மற்றும் ராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது.

இதைடுயத்து,  சம்பவ இடத்திற்கு விரந்து சென்ற ராணுவத்தினர்  அங்கிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு அவர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில்,  ராணுவத்தினர் தாக்குதலே ஓங்கியிருந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட மொத்தம் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இத்தகவலை ஈராக் ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து ஈராக் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் அப்துல்லா லஹாப், 'ருட்பா பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது விமானத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மூத்த ஐஎஸ்ஐஎஸ் தலைவர்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர் 'என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 7 வாரத்தில் ரூ.5.93 கோடி அபராதம் வசூல்