Publish Date: Tue, 29 Sep 2020 (08:15 IST)
Updated Date: Tue, 29 Sep 2020 (08:16 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 3,35,41,722 ஆக உள்ளது.
உலகில் சுமார் 213 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்திற்கே சவால் விடுத்துள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 3,35,41,722 ஆக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 76,67,024 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65,,375 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சுமார் 2 கோடியே 48 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 37,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73,61,205 ஆக உள்ளது.
இதேபோல பிரேசிலில் 16,018 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,48,327 ஆக உள்ளது.