உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த டிசம்பர் முதல் சீனாவில் பரவி பல உயிர்களை பலிகொண்ட இந்த வைரஸ் தற்போது சீனாவில் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
முக்கியமாக இத்தாலியில் மற்ற நாடுகளை விட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் வேகமாக அதிகரித்த பலி எண்ணிக்கையால் இத்தாலியில் 1,266 பேர் உயிரிழந்துள்ளனர். 17,660 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஈரான், கொரியா, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.
இத்தாலியில் அதிகரித்த பலி எண்ணிக்கையால் உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,429ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1.45 லட்சத்தை தாண்டியுள்ளது.