”பெண்கள் குட்டை பாவாடை அணியாமல், முழுவதுமாக உடை அணிய வேண்டும் அது தான் அவர்களுக்கு பாதுகாப்பு” என்று இந்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரதுறை அமைச்சர் மகேஷ் சர்மா கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில், புர்கா உடைக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து அந்நாட்டு பிரதமர் மனுவல் வால்ஸ் கூறியதாவது, ”திறந்த மார்புடன் இருக்கும் பிரான்ஸ் குடியரசின் தேசிய சின்னமாக இருக்கும் மரியான்னே சிலை தான் சுதந்திரத்திற்கான அடையாளம். உடையில்லாத மார்பகங்களே பிரான்சின் சிறந்த பிரதிநிதித்துவம். அதுவே பெண்களின் சுதந்திரத்திற்கான அடையாளம்.” என்றார்.
இந்திய அரசியல்வாதி, பெண்களை முழுவதுமாக உடை அணிய சொல்கிறார். பிரான்ஸ் அரசியல்வாதி பெண்களை உடையில்லாமல் சுதந்திரமாக இருங்கள் என்கிறார். இவர்களுக்கு இடையில் பெண்கள் மாட்டிக்கொண்டு அவதிப்படுகின்றனர்.