Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகளவில் காண்டம் தட்டுப்பாடு – வாங்கிக் குவித்த மக்கள் !

உலகளவில் காண்டம் தட்டுப்பாடு – வாங்கிக் குவித்த மக்கள் !
, சனி, 28 மார்ச் 2020 (09:09 IST)
உலகளவில் தற்போது காண்டம் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளதாக முன்னணி காண்டம் தயாரிப்பு நிறுவனமான Karex நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனாவால் அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி இருக்க வேண்டுமோ தெரியாது என்ற பதற்றத்தில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். இதில் காண்டமும் அடக்கம்.

இதனால் கடந்த சில நாட்களாக உலக அளவில் காண்டம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது உலகில் முன்னணி காண்டம் உற்பத்தி நிறுவனமான காரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Goh Miah Kiat கூறுகையில், ‘வரும் நாட்களில் இன்னும் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்தத் தட்டுப்பாடுகள் 2 வாரங்கள் முதல் ஒரு மாதம் வரையில் நீட்டிக்கும் என எங்கள் நிறுவனம் கணித்துள்ளது. இதை நினைத்துப் பார்த்தாலே எனக்குப் பயமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனிமைப்படுத்தப்பட்டவர் கடித்து மூதாட்டி உயிரிழப்பு – தேனியில் அதிர்ச்சி!