கன்னியாகுமாரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 66 வயது நபர் ஒருவர் திடீரென இறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த இந்த நபருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவு வருவதற்கு முன்னரே அவர் உயிரிழந்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
இந்த நிலையில் சமீபத்தில் அவர் கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தவர் என்றும் அவரது மகனும் துபாயில் இருந்து கன்னியாகுமரிக்கு திரும்பி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனால் இருவரில் யாருக்காவது ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து உயிரிழந்த நபரின் மகனும் கொரோனா வைரஸ் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த கன்னியாகுமரி நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டும் அவர் கொரோனாவால் உயிரிழந்தாரா? என்பது உறுதி செய்யப்படும்.
ஏற்கனவே சமீபத்தில் கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஒருவர் உயிரிழந்தார் என்றும் ஆனால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொரோனாவால் இறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது