Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருளில் மூழ்கிய சீனா.. தினமும் 9 மணி நேரம் மின்தடை பின்னணி என்ன??

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:21 IST)
சீனாவில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அமலில் இருப்பதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 

 
விண்வெளியில் சாதனைகளை படைக்கும் சீனா மின் பற்றாக்குறையால் திணறி வருகிறது. அங்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 
 
குடியிருப்புப் பகுதிகளில் பகல் நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு இரவு நேரங்களில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. சீனாவில் உள்ள ஒட்டு மொத்த மாகாணங்களும் மின்சாரம் இல்லாமல் முடங்கிப் போவதைத் தவிர்க்க, 16 மாகாணங்களில் சுழற்சி முறையில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே இவ்வாறு செய்யப்பட்டு வருகிறது. இதை சரி செய்ய சீனா பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை சீனாவில் மின்வெட்டு பிரச்னை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments