Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவிடமிருந்து ஜம்மு காஷ்மீரை பிரித்த சீனா....

இந்தியாவிடமிருந்து ஜம்மு காஷ்மீரை பிரித்த சீனா....
, வியாழன், 4 ஜனவரி 2018 (20:35 IST)
கனடாவில் விற்கப்படும் சீன தயாரிப்பு பொருளான உலக உருண்டையில் இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டு காட்டியிருப்பது சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
கனடாவில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த சந்தீப் தேஷ்வால் தனது மகளுக்காக உலக உருண்டையை வாங்கியுள்ளார். அது சீனாவால் தயாரிக்கப்பட்டிருந்தது. அவரது மகள், அந்த உலக உருண்டையில் கனடா, இந்தியா எங்கு உள்ளது என கேட்டுள்ளார். அப்போது, இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் இருந்து தனித்து காட்டப்படுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 
 
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, எனது மகளிடம் இந்தியாவின் ஒரு பகுதிதான் ஜம்மு காஷ்மீர் என்பதை நான் வலியுறுத்திக் கூறாமல் விட்டால், அவள் மனதில் இந்தியாவை பற்றிய வேறு புகைப்படம் தான் இருக்கும். இதனால், எதிர்கால சந்ததியினருக்கு இந்தியாவை பற்றி வேறு மாதிரியான எண்ணம்தான் இருக்கும் என தெரிவித்துள்ளார். 
 
இதே போன்று கடந்த மூன்று மாதங்களுக்கும் முன்பு சீனாவின் உலக உருண்டை இவ்வாறு விற்கபட்டது. அதில் ஜம்மு காஷ்மீரும், அருணாசல பிரதேசமும் இந்தியாவில் இருந்து பிரித்து கட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்; பாதி விழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்