Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்; பாதி விழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்

Advertiesment
அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்; பாதி விழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்
, வியாழன், 4 ஜனவரி 2018 (19:18 IST)
ஊதிய உயர்வு கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தையை அடுத்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 
அடிப்படை மற்றும் தர ஊதியத்துடன் சேர்த்து 2.57% ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக இன்று சென்னையில் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் ஊழியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடந்தது. 2.40% மட்டுமே உயர்த்தப்படும் என்று தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதையடுத்து 10 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை, தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
 
சென்னையில் பல இடங்களில் பேருந்துகளை பாதி வழியில் நிறுத்தி பயணிகள் இறக்கி விடப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு மற்றும் திருவான்மியூர் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிகாந்த் ஒரு 420: சீண்டும் சுப்பிரமணியன் சுவாமி!