Publish Date: Mon, 13 Feb 2023 (18:02 IST)
Updated Date: Mon, 13 Feb 2023 (18:05 IST)
மாணவர்களிடம் விந்தணுக்களை தானமாக கேட்கும் நாடு: அதிர்ச்சி தகவல்..!
விந்தணுக்களை தானமாக தாருங்கள் என மாணவர்களிடம் சீனா கோரிக்கை விடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் கடந்து சில ஆண்டுகளாக மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதை அடுத்து மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
இதனை அடுத்து விந்தணுக்களை தானமாக செய்யுமாறு கல்லூரி மாணவர்களிடம் சீன அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு விந்தணு வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஏராளமான மாணவர்கள் தங்களுடைய விந்தணுக்களை தானம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவின் மக்கள் தொகை சரிந்துள்ளதாகவும் சமீபத்தில் திருமணம் ஆகாதவர்களும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என சீன அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் மக்கள் தொகை சரிவு ஒரு புறம் இருக்க சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.