Publish Date: Fri, 11 Apr 2025 (10:44 IST)
Updated Date: Fri, 11 Apr 2025 (10:45 IST)
இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த கூடுதல் வரிவிதிப்பு 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய பங்குச்சந்தைகள் நேற்று மிகப்பெரிய அளவில் உயர்ந்தன.
நேற்று மகாவீர் ஜெயந்தி காரணமாக இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனால் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதும், பெரும் ஏற்றத்தில் காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்ந்து, 74,930 என்ற புள்ளியில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 353 புள்ளிகள் உயர்ந்து, 22,773 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, கோல் இந்தியா, எச்.சி.எல் டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், ஐ.டி.சி, கொடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
மாறாக, அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, நெஸ்ட்லே இந்தியா உள்ளிட்ட சில பங்குகள் மட்டும் இன்றைய வர்த்தகத்தில் கீழ்வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.