Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானுடன் நட்புறவை வளர்க்க தயார்… சீனா அறிவிப்பு!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:54 IST)
ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ளது தாலிபான்கள் அமைப்பு. இது உலக அரசியலில் இன்று முக்கிய விவாதப் பொருளாக உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆக்கிரமிப்பால் அரசு கவிழ்ந்த நிலையில் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலீபான்களுக்கு பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தை தலீபான் அமைப்பு மூடியுள்ளதுடன் விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் அங்கிருந்து புறப்படும் சொற்ப விமானங்களிலும் எப்படியாவது தப்பி பிழைத்து விட எண்ணி பலர் அடைக்கலம் தேடி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவம் விமானம் ஒன்றை சுற்றி பலர் ஓடி வருவதும், அதன் மீது அமர்ந்திருப்பதுமான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது சீனா ஆப்கானிஸ்தானோடு நட்புறவோடு இருக்க தயாராக உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘ஆப்கன் மக்கள் தங்கள் பாதையை தீர்மானிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். அதை சீனா மதிக்கிறது. அவர்களுடன் நட்புறவுக்குத் தயாராக இருக்கிறோம்.’ என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments