Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்களும்தான் கொரோனா மருந்து கண்டுபுடிச்சிருக்கோம்! – சீன் போடும் சீனாவின் செயல்!

Advertiesment
நாங்களும்தான் கொரோனா மருந்து கண்டுபுடிச்சிருக்கோம்! – சீன் போடும் சீனாவின் செயல்!
, புதன், 22 ஜூலை 2020 (08:51 IST)
கொரோனா வைரஸுக்கு எதிராக மருந்துகள் கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் சீனாவும் மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த சூழலில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் பல மும்முரமாய் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது. ரஷ்யா தான் கண்டுபிடித்த மருந்தை நோயாளிகளிடம் பரிசோதித்து வெற்றிக் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்த மருந்தும் கொரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவும் தான் கண்டுபிடித்த மருந்து வெற்றியடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. சீனா கண்டுபிடித்த மருந்தை 508 தன்னார்வலர்களிடம் சோதனை செய்ததாகவும் அதில் அவர்களது எதிர்ப்பு திறன் கூடியுள்ளதாகவும் லான்செட் இதழில் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த மருந்து கொரோனா இல்லாத சாதாரண மக்களிடம் மட்டுமே பரிசோதிக்கப்பட்டது. அதை கொரோனா நோயாளிகளிடம் பரிசோதித்து பார்த்து முடிவை வெளியிட வேண்டும் என சீன நோய் கட்டுப்பாட்டு தடுப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மற்ற நாடுகள் கொரோனா நோயாளிகளிடம் பரிசோதித்து மருந்தில் வெற்றி காணும்போது சீனா சாதாரண மக்களுக்கு அளித்துவிட்டு வெற்றி என அறிவித்தது உலக அரங்கில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்கானிஸ்தானில் இரு தாலிபன் தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளம் பெண்