Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை குறைத்து மதிப்பிட வேண்டாம்; போருக்கு ரெடியா இருங்க! – சீன ஆலோசகர் பகீர் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (08:13 IST)
இந்திய – சீன படைகளிடையே லடாக் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் எழுந்துள்ள நிலையில் சீன தாக்குதலுக்கு தயாராக வேண்டும் என அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் சில நாட்களுக்கு முன்னர் சீன – இந்திய ராணுவத்தினரிடையே எழுந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதோடு, சமாதான பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சீன முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரலும், சீன பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவருமான குயோ லியாங் “நாம் நமது எல்லைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். பல இடங்களில் இந்தியா நமது படைகளை எல்லையை விட்டு விரட்டி வருகிறது, இந்தியாதான் அத்துமீறுகிறது. நாம் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும். இந்த பிரச்சினை முடியும் முன்னர் இந்தியா எப்போது வேண்டுமானாலும் நம்மை தாக்கலாம், அதற்கு முன்னால் நாம் முந்தி கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவை சீனா குறைத்து மதிப்பிட்டு விட கூடாது, இந்தியா ஆபத்தான நாடு என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்கும் காலம் இப்போது இல்லை என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments