Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகளவில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு! அதிர்ச்சி தகவல்

Advertiesment
உலகளவில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு! அதிர்ச்சி தகவல்
, ஞாயிறு, 28 ஜூன் 2020 (07:55 IST)
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,00,75,115 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது மனித இனத்திற்கே பெரும் அச்சத்திற்குரிய தகவலாக உள்ளது. விஞ்ஞானம் முன்னேறியதாக கூறப்படும் 21ஆம் நூற்றாண்டில் ஒரு வைரஸால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது விஞ்ஞானத்தை விட இயற்கைதான் பெரிது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது
 
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 1,00,75,115 பேர் பலியாகியிருக்கும் நிலையில் இந்த வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54,53,247ஆக உயர்ந்துள்ளது என்பதும் இந்த வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,00,626ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்பு அடைந்த அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 25,96,537ஆக உயர்ந்துள்ளதாகவும், அந்நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,28,152ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனா வைரஸால் 2,596,537 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் கொரோனா வைரஸால் 627,646 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் 529,577 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் கொரோனா வைரஸால் 295,549 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரு நாட்டில் கொரோனா வைரஸால் 275,989 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலி கொரோனா வைரஸால் 267,766பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெவித்துள்ளது
 
இந்தியாவில் கொரோனா வைரஸால் 529,577 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 16,103 பேர்கள் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலவீனமான பிரதமர் மோடியின் செயலால் கலங்கி நிற்கின்றது - எம்.பி செல்வி ஜோதிமணி