கடந்த சில மாதங்களாக சீன கடல் எல்லைக்குள் அமெரிக்க கப்பல்கள் அத்துமீறி நுழைவதாக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து 1949ல் தைவான் பிரிந்து தனி நாடானது. ஆனால் தைவான் சீனாவின் ஒரு பகுதியே என சீனா தொடர்ந்து வாதிட்டு வருகிறது. இந்நிலையில் தைவான் ஜலசந்தி வழியாக மற்ற நாட்டு கப்பல்கள் செல்வதையும் சீனா கண்டித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முதற்கொண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் அடிக்கடி தைவான் ஜலசந்தி வழியாக பயணித்து வருகின்றனர். இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள சீனா, அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவான் ஜலசந்தி வழியாக செல்வதால் தைவான் ஜலசந்தியின் ஸ்திரத்தன்மையும், அமைதியும் குலைவதாக தெரிவித்துள்ளது.