2020 எல்லை மோதல் பகுதிக்கு அருகில் உள்ள பாங்காங் ஏரியின் கிழக்கு கரையில், சீனா ஒரு புதிய வான் பாதுகாப்பு வளாகத்தை அமைத்துவருவதாக செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த வளாகத்தில் கட்டளை மையங்கள், ராடார் நிலைகள் மற்றும் வியூகம் நிறைந்த மூடப்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள்அமைக்கப்படுகின்றன.
இந்த ஏவுதளங்கள், ஏவுகணைகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட மடக்கும் கூரைகளை கொண்டுள்ளன. இது HQ-9 தரை-வான் ஏவுகணை அமைப்புகளுக்கு மறைவையும், தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பையும் வழங்கும் என உளவுத்துறை ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்தியா மேம்படுத்திய நியோமா விமான தளத்திற்கு எதிரே உள்ள கார் கவுண்டி பகுதியிலும், இதேபோன்ற தளத்தின் நகல் வடிவம் கட்டப்பட்டு வருவதாக அமெரிக்காவின் ஆல்சோர்ஸ் அனாலிசிஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்த 'நகரும் கூரைகள்' ரகசியமாக ஏவுகணைகளை ஏவ உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவின் இந்த புதிய கட்டுமானங்கள், கிழக்கு லடாக் பகுதியில் அதன் இராணுவ வியூகத்தை மேம்படுத்துவதை காட்டுகிறது.