சர்வாதிகாரியின் மனைவி மரணம்:வீதியில் இறங்கி கொண்டாடிய பொது மக்கள்!
சிலி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி அதிபர் அகஸ்டோ என்பவரின் மனைவி இறந்ததை அடுத்து அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்
சிலி நாட்டில் கடந்த 1973-ஆம் ஆண்டில் ராணுவப் ஆட்சி நடைபெற்றது என்பதும், இதனை அடுத்து ஆட்சியை கைப்பற்றிய அகஸ்டோ என்பவர் சர்வாதிகார ஆட்சி செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006ஆம் ஆண்டு அகஸ்டோ காலமான நிலையில் அவரது மனைவியும் இன்று காலமாகியுள்ளார். இதனை அடுத்து சிலி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி மனைவி மறைந்ததை அடுத்து பொது மக்கள் வீதியில் இறங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்
அகஸ்டோ ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.