சுவிட்சர்லாந்தில் சுற்றுலா சென்ற இடத்தில் 4 வயது குழந்தை திடீரென தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்தது.
சுவிட்சர்லாந் பேர்ன் மாகாணத்தில் உள்ள ஓபர்லேண்ட் பகுதியில் நேற்று முன் தினம் தாய் மற்றும் மகன் சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு அந்த 4 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது திடீரென்று தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்தது.
உடனே மீட்பு குழுவினர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவருடன் கயிறு பள்ளத்தில் இறங்கி, பலத்த காயங்களுடன் இருந்த குழந்தைக்கு முதலுதவி அளித்து காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை உயிர் தப்பியது.