Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்தபோது செல்ஃபோன் வெடித்ததால் சிறுமி மரணம்..

Advertiesment
பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்தபோது செல்ஃபோன் வெடித்ததால் சிறுமி மரணம்..

Arun Prasath

, திங்கள், 30 செப்டம்பர் 2019 (18:58 IST)
செல்ஃபோனில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கிய பெண்ணின் செல்ஃபோன் பேட்டரி வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆல்வா அப்சல்பெக் என்ற 14 வயது சிறுமி, இரவில் தனது செல்ஃபோனில் பாட்டுக் கேட்டுக்கொண்டே தூங்கியுள்ளார். இந்நிலையில் காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு அச்சிறுமியை கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இது குறித்து போலீஸார், சிறுமி இரவு செல்ஃபோனை சார்ஜில் போட்டுவிட்டு தலைக்கு அருகில் வைத்து பாட்டு கேட்டுகொண்டே தூங்கியுள்ளதாகவும், அதிக நேரம் சார்ஜ் ஏறியதால் பேட்டரி வெடித்து தலையில் காயம் பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானுக்கு அழைக்கப்படாத மோடி! விருந்தினராக சென்ற மன்மோகன் சிங்!