Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 20 March 2025
webdunia

குழந்தையை காப்பாற்ற ஹீரோவாக மாறிய பூனை..வைரல் வீடியோ

Advertiesment
குழந்தையை காப்பாற்ற ஹீரோவாக மாறிய பூனை..வைரல் வீடியோ

Arun Prasath

, சனி, 9 நவம்பர் 2019 (20:49 IST)
மாடிப்படிகட்டுகளிலிருந்து தவறி விழப்போன ஒரு வயது குழந்தையை தாவி சென்று ஒரு பூனை தடுத்து நின்று காப்பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொலம்பியாவில் ஒரு வீட்டில் சாமுவேல் என்ற ஒரு வயது குழந்தை அங்கேயும் இங்கேயும் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை தவழ்ந்துகொண்டே படிக்கட்டுகளில் விழப்பார்த்துள்ளது.

அப்போது அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்த பூனை, பாய்ந்து ஓடிவந்து மாடிப்படிகட்டுகளிலிருந்து விழப்போன குழந்தையை தடுத்து ஹீரோ போல் காப்பாற்றியது. அந்த பூனையின் பெயர் கட்டுபெலா என கூறப்படுகிறது. மேலும் அந்த குழந்தையை காப்பாற்றியது மட்டுமல்லாமல், மீண்டும் குழந்தை தவறி விழாமல் தடுப்பதற்காக மாடிபடிகட்டுகளின் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தது.

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்நாவிஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு..